இலங்கையில் இந்திய அமைதிப் படையினர் பெண்களை பாலியல் வல்லுவுக்கு உட்படுத்தினர். அத்துடன் பல தமிழர்களை கொலையும் செய்தனர்.
இவ்வாறு நாடாளுமன்றில் குற்றஞ்சாட்டியிருக்கிறார் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன். அங்கு உரையாற்றுகையில் அவர் மேலும் தெரிவித்தாவது: 1987 முதல் 90 வரை இலங்கையில் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இந்திய அமைதிப்படையினர் பல தமிழ்பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினர்; பல தமிழர்களை கொலையும் செய்தனர். இதற்கான ஆதாரங்கள் உள்ளன.
இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் மீன் பிடிப்பதையும். வடபகுதி மீனவர்களின் வளங்களை சூறையாடுவதையும் தடுத்து நிறுத்தியதற்காக இலங்கை கடற்படையை பாராட்டுகிறேன். எனக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சி தொடர்ந்தும் குற்றச்சாட்டுகளை முன்வைக்குமானால் அதன் நடவடிக்கைகளை அம்பலப்படுத்துவேன்.- என்றார். அத்துடன் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கினார் என்றும் 1989 இல் 350 விடுதலைப்புலிகளே இருந்தனர்.
பிரேமதாஸ கொடுத்த ஆயுதங்களாலேயே விடுதலைப் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்தது என்றும் குற்றஞ்சாட்டிய அவர், ஐ.நா விசாரணையை ஆதரிப்பதன் மூலமாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சமாதானத்தை குழப்ப முயல்கிறது என்றும் சாடினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக