பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டப் பேரணி பாராளுமன்ற வளாகத்தை அண்மித்து இருப்பதன் காரணமாக அங்கு கலகம் அடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாகவும், நீர்த்தாங்கிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
கல்வித்துறையில் காணப்படும் சீரழிவுகளுக்கு எதிராக பல்கலைக்கழக மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த ஆர்ப்பாட்டம் இன்று காலை தாமரைத் தாடகம் அருகாமையில் ஆரம்பமானது
இலசவ கல்வி அழிப்பு, தனியார் பல்கலைக்கழகம் அமைப்பு உள்ளிட்ட பல விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக ராஜகிரிய முதல் பொல்துவ சந்திவரையான பாதையில் பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பிந்திக்கிடைத்த தகவல்களின்படி நாடாளுமன்ற வீதியில் நுழைந்த பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டப் பேரணியை கலைப்பதற்காக கண்ணீர்ப்புகைப் பிரயோகத்தையும் நீர்தாரைப் பிரயோகத்தையும் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
இதனால் லிப்டன் சுற்றுவட்டப் பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக