
எவ்வளவு சட்டங்கள் அமுல்படுத்தப்பட்டாலும் வெளிநாட்டவர்களுக்கு காணி வழங்கும் நடவடிக்கைகள் தொடர்கின்றன.
தற்போது கூட கடலை நிரப்பி நகரமாக்கும் திட்டத்தின் 46 வீதமான காணிகள் சீனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய பொருட்கள் மீது வரிக்கு மேல் வரி அறவீடு செய்யும் நீங்கள், சீனர்களுக்கு சலுகைகளை வழங்குகின்றீர்கள்.
கடலை நிரப்பி துறைமுகம் அமைக்கும் சீன நிறுவனம் மிகவும் மோசமானது என உலக வங்கி தெரிவித்துள்ளது.
இந்த நிறுவனம் ஊழல் மோசடி மிக்கது என உலக வங்கி குறித்த நிறுவனத்தை தடை செய்துள்ளது.
ஆசிய அபிவிருத்தி வங்கியும் குறித்த நிறுவனத்தை தடை செய்துள்ளது.
வெளிநாட்டவர்களுக்கு காணி வழங்கப்படாது என அரசாங்கம் உறுதியளித்த போதிலும் அது நடைமுறைப்படுத்தப்படுவதில்லை.
கல்பிட்டியில் 14 தீவுகள் வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த தீவுகளின் ஆயிரம் ஏக்கர் காணி கொள்ளையிடப்பட்டுள்ளது.
வரலாற்று சிறப்புமிக்க இடங்கள், இயற்கை ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் சீன நிறுனங்களுக்கு வழங்கப்படுகின்றது.
அரசாங்கத்தின் கொள்ளை மக்களை வாழ வைப்பதா அல்லது பல்தேசிய நிறுவனங்களை திருப்திப்படுத்துவதா?
பல்தேசிய நிறுவனங்களுக்கு ஏன் இந்தளவு காணிகள் வழங்கப்படுகின்றன.
நாட்டில் வீடுகள் இன்றி 15 லட்சம் பேர் வாழ்ந்து வரும் நிலையில் நீங்கள் கொல்ப் மைதானங்களை அமைக்கின்றீர்கள்.
இல்லாதவர்களிடமிருந்து பறித்து இருப்பவர்களை வலுப்படுத்துவதே இந்த அரசாங்கத்தின் கொள்கையாக அமைந்துள்ளது என சஜத் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.
நாடாளுமன்றில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக