ஞாயிறு, 26 அக்டோபர், 2014

கிளிநொச்சியில் போர்க்குற்ற சாட்சியமளிப்பு படிவத்தை விநியோகம் செய்தவர் கைது..!!!

கிளிநொச்சியில் போர்க்குற்ற சாட்சியமளிப்பு படிவத்தை பொதுமக்களுக்கு விநியோகம் செய்த குற்றச்சாட்டில் ஒருவரை பயங்கரவாதத் தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி பிரதேசத்தை சேர்ந்த சின்னத்தம்பி கிருஸ்ணராசா என்ற 06 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

ஐ.நா.மனித உரிமைகள் பேரவையினால் நியமிக்கப்பட்ட போர்க்குற்ற விசாரணைக் குழுவுக்கு சாட்சியமளிப்பதற்கொனத் தயாரிக்கப்பட்ட படிவங்களை குறித்த நபர் மக்களுக்கு விநியோகித்துக் கொண்டிருந்தபோதே நேற்று மதியம் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபரிடமிருந்து போர்க்குற்ற விசாரணைக்காக சமர்ப்பிக்கப்படவிருந்த படிவங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கிளிநொச்சிப் பொலிஸார் தெரிவித்தனர்.


கைது செய்யப்பட்ட நபரை வவுனியாவுக்கு கொண்டுசென்று விசாரணைக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக