வெள்ளி, 24 அக்டோபர், 2014

புனித பாப்பரசரின் வருகையை முன்னிட்டு முத்திரை வெளியீடு அரசாங்கம் தீர்மானம்..!!

புனித பாப்பரசரின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு ஞாபகார்த்த முத்திரையொன்றை வெளியிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
புனித பாப்பரசர் பிரான்சிஸ் எதிர்வரும் ஜனவரி மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இதனை முன்னிட்டு அவரைக் கௌரவிக்கும் வகையில் முத்திரைப் பணியகத்தின் வடிவமைப்பில் ஞாபகார்த்த முத்திரையொன்று வெளியிடப்படவுள்ளது.

பத்து ரூபா முகப்புப்பெறுமதியைக் கொண்ட இந்த முத்திரையில் பாப்பரசரின் படம் மற்றும் அவருடைய இலங்கை விஜயம் இடம்பெறும் திகதி என்பன உள்ளடக்கப்பட்டிருக்கும்.

“பாப்பரசரின் இலங்கை வருகை” என்று இந்த முத்திரைக்கு பெயரும் சூட்டப்பட்டுள்ளது.

இதற்கிடையே ஏமாற்றுப் பேர்வழிகள் சிலர் பாப்பரசரின் வருகையை முன்னிட்டு வெளியிடப்படவுள்ள முத்திரையின் விபரம் அடங்கிய முதல்நாள்
உறையுடன் முத்திரையைப் பெற்றுத் தருவதாக கூறி பலரிடம் பணவசூல் செய்து கொண்டிருப்பதாக முத்திரைப் பணியகத்துக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது.

அவ்வாறான முகவர்கள் யாரையும் தாம் நியமிக்கவில்லை என்று வலியுறுத்தியுள்ள முத்திரைப் பணியகம், பாப்பரசரின் வருகை குறித்து வெளியிடப்படும் முத்திரையை அரசாங்க முத்திரைப் பணியகத்தில் மாத்திரமே முதல்நாள் உறையுடன் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக