தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடை நீக்கம் குறித்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தலைவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டு வருவதாக பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேரா தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் 28 நாடுகளினதும் தலைவர்களுக்கு இவ்வாறு விளக்கம் அளிக்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடை நீக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதக விளைவுகள் குறித்து தெளிவுபடுத்தும் நடவடிக்கைகள், அந்தந்த நாடுகளின் இலங்கை தூதரங்களின் ஊடாக முன்னெடுக்கப்படுகின்றது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி ரொட்னி பெரேராவின் தலைமையில் இந்த விளக்கம் அளிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
எதிர்வரும் காலங்களில் சட்ட ரீதியான நடவடிக்கைகளின் ஊடாக ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருங்கிச் செயற்பட அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் புலிகள் தொடர்பில் மென்மையான போக்கைப் பின்பற்றினால்ää புலிகள் அமைப்பு மீளவும் வலுப்பெறக் கூடும்.
இது தொடர்பில் சர்வதேச சமூகத்தை தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி அமைச்சர் நியோமல் பெரேரா தெரிவித்துள்ளார்.
சிங்களப் பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர் காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக