திங்கள், 29 செப்டம்பர், 2014

யார் போட்டியிட்டாலும் ஜனாதிபதி மஹிந்தவை தோற்கடிக்க முடியாது நிர்மல கொதலாவல..!!

எதிர்க்கட்சிகளின் சார்பில் யார் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டாலும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை தேர்தலில் தோற்கடிக்க முடியாது என அமைச்சர் நிர்மல கொதலாவல தெரிவித்துள்ளார்.
நொண்டிச் சாக்கு சொல்லும் நோக்கிலேயே பொது வேட்பாளர் என்ற விடயம் பற்றி பேசப்படுகின்றது.

எந்த ஐயா அல்லது அம்மணி தேர்தலில் போட்டியிட்டாலும், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்சவே வெற்றியீட்டுவார்.

வேட்பாளரின் பெயர், பிரபல்யம், ஆளுமை போன்ற காரணிகள் தேர்தலில் தாக்கத்தை செலுத்தும் என்பதனை மறுப்பதற்கில்லை. எனினும் வேட்பாளர் போட்டியிடும் கட்சிகளின் கொள்கைகள் அதனை விடவும் முக்கியமானது.


2005ம் ஆண்டு தேர்தல் முடிவுகள் இதனையே பறைசாற்றி நிற்கின்றது.

2005ம் ஆண்டில் ஜனாதிபதி மஹிந்தவுடன் போட்டியிட்ட வேட்பாளர் பொலிவுட் நடிகருக்கு உரிய பிரபல்யத்தை பெற்றிருந்தார்.

எனினும் மக்கள் அரசியல் கொள்கைகளின் அடிப்படையில் மஹிந்த ராஜபக்சவை ஜனாதிபதியாக்கினர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் கொள்கைகள் இன்று வரையில் மாற்றம் பெறவில்லை.

மக்கள் தெளிவான அரசியல் கொள்கை ஒன்றையே விரும்பி நிற்கின்றனர் என நிர்மல கொதலாவல சிங்கள ஊடகமொன்றுக்கு நேர்காணல் வழங்கியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக