வெள்ளி, 26 செப்டம்பர், 2014

வவுனியாவில் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் நடாத்தும் வழிகாட்டற் கருத்தரங்கு!! (படங்கள் இணைப்பு)


ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் நடாத்தும், கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை மாணவர்களுக்கான இலவசக் கல்விக் கருத்தரங்கு வவுனியா மாவட்டத்தில் இன்றைய தினம் (26/09) ஆரம்பமானது.

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக தமிழ் மாணவர்களால் ஒவ்வொரு
ஆண்டும், இலவச கல்விக் கருத்தரங்கு நடத்தப்பட்டு வருகின்றது.

வடக்கு, கிழக்கு, மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின், 13 மாவட்டங்களில் உள்ள 187 பாடசாலைகளைச் சேர்ந்த 7 ஆயிரத்து 500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த இலவசக் கருத்தரங்கில் பங்கெடுக்கின்றனர்.

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளில் முன்னேற்றம் ஏற்படுத்துவதற்காக கணித - விஞ் ஞான பாடங்களில் இலவசக் கல்விக் கருத்தரங்கு இன்று (26/09) வவுனியா கந்தபுரம் வாணி வித்தியாலய த்தில் ஆரம்பமானது.

இவ் கருத்தரங்கில் மூன்று முறிப்பு பாடசாலை, கூமாங்குளம் சித்திவிநாயகர் வித்தியாலயம், கந்தபுரம் வாணி வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளை சேர்ந்த 200 மாணவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

நாளைய தினமும்  மேற்படி கருத்தரங்கு நடைபெறுமான பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் தெரிவித்தனர்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக