யாழ்ப்பாணம் சுன்னாகம் மயிலணி சைவ மகா வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழாவும், நிறுவனர் நினைவு நாளும் 26.06.2014 அன்று மதியம் 1 மணியளவில் விவேகானந்தர் மண்டபத்தில் நடைபெற்றது.
வித்தியாலய அதிபர் றிசா தனஞ்சயன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், புளொட் அமைப்பின் தலைவரும், வட மாகாண சபை உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் பிரதம விருந்தினராகவும், ஏசியன் ரிபியுன் இணையத்தின் பிரதம ஆசிரியர் க.த.இராஜசிங்கம் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.
இதன்போது இப்பாடசாலையில் பல்வேறு துறைகளில் திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு அதிதிகளால் பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக