பண்டத்தரிப்பு பிரான்பற்று கட்டுவரைப் புளியடி அம்மன் ஆலயத்தில் இன்று சனிக்கிழமை காலை மிருக வேள்வி இடம் பெற்றது. ஆலயத்தில் இடம் பெற்ற பொங்கல் படையல்களைத் தொடர்ந்து கடா வெட்டும் நிகழ்வும் இடம் பெற்றது. இதில் சுமார் 300 க்கும் மேற்பட்ட கடாகள் வெட்டப்பட்டுள்ளதுடன் 75 க்கும் மேற்பட்ட சேவல்களும் வெட்டப்பட்டுள்ளன. பிரான்பற்று கிராமம் உட்பட சுற்றுக் கிராமங்கள் பலவற்றில் இருந்து கடாகள் உழவுயந்திரங்கள், லாண்ட் மாஸ்டர்கள், வடி வாகனங்கள், பிக்கப்
வாகனங்களில் ஊர்வலமாக ஆலயத்துக்குக் கொண்டுவரப்பட்டு பூசைகளின்போது பலியிடப்பட்டுள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக