செவ்வாய், 24 ஜூன், 2014

பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் பலி...!!!

பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் இன்று கொல்லப்பட்டுள்ளார்.
திவுலப்பிட்டி குடாகம்மான பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.  19 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

பொலிஸ் உத்தியோகத்தரை கத்தியால் குத்தியதாக இளைஞர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

வாழைப்பழ வியாபாரி ஒருவரை இளைஞர் கத்தியால் குத்தி காயப்படுத்தியதாகவும் அது தொடர்பில் விசாரணை நடத்த சென்ற பொலிஸ் உத்தியோகதத்தரையும் இளைஞர் கத்தியால் குத்தியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தற்காப்பு நோக்கில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் கொல்லப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்த வியாபாரி மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக