வெள்ளி, 8 ஆகஸ்ட், 2014

இலங்கை அரசாங்கத்துக்கு சட்டமா அதிபர் மீது நம்பிக்கையில்லை: ரணில் - பொய் என்கிறார் பீரிஸ்...!!!

இலங்கை அரசாங்கத்தின் காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு, வெளிநாட்டு நிபுணர்களை நியமித்தமை சட்டத்துக்கு புறம்பான செயல் என்று எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர், குறித்த நிபுணர் குழுவுக்கு எவ்வளவு கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. இது எந்த சட்டத்துக்கு கீழ் வழங்கப்படுகிறது.

இலங்கையின் சட்டப்படி விசாரணை ஆணைக்குழுவின் கீழ் எந்த கொடுப்பனவையும் செய்ய முடியாது.

இந்தநிலையில் எதனைக்கொண்டு நிபுணர்களுக்கான கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளன.

ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்க இலங்கையின் சட்டமா அதிபரை ஏன் அணுகவில்லை.



இலங்கையின் சட்டமா அதிபர் மீது அரசாங்கத்துக்கு நம்பிக்கையில்லை என்பதையே இது காட்டுகிறது என்றும் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளித்த வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், வெளிநாட்டு தலையீட்டை தடுக்கும் முகமாகவே இந்த நிபுணர் குழுவின் ஆலோசனை பெறப்படவுள்ளதாக குறிப்பிட்டார்.

எனவே இதில் சட்டப்பிரச்சினை எதுவும் இல்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் கேட்டுக்கொண்டமைக்கு அமைய, பொறுப்புள்ள அரசாங்கம் என்ற வகையிலேயே வெளிநாட்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக