சென்னை எம்.எஸ்.சுவாமிநாதன் ஆய்வு மையம் ஒழுங்கு செய்துள்ள மாநாடு ஒன்றில், இலங்கை பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளதாக குற்றம் சுமத்தி, அண்ணா திராவிட முன்னேற்றக்கழக சட்டத்தரணிகள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் மீது முன்னெடுத்த அவதூறை கண்டித்து இதன்போது சட்டத்தரணிகள் கோஷமிட்டனர்.
இதன்போது அங்கு வந்த பொலிஸார், ” 2025 ஆம் ஆண்டில் பசியின் சவாலை பூச்சியமாக்கல்” என்ற தலைப்பிலான மாநாடு நடந்து கொண்டிருப்பதாகவும், அதில் இலங்கை பிரதிநிதிகள் எவரும் பங்கேற்கவில்லை என்றும் தெரிவித்தனர்.
எனினும் இலங்கை விவசாய அமைச்சின் உதவிப்பணிப்பாளர் சந்திரசிறி என்பவர் மாநாட்டில் பங்கேற்றுள்ளதாகவும் அவரை வெளியேற்ற வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் வலியுறுத்தினர். எனினும் இதனை பொலிஸார் ஏற்றுக்கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக