வியாழன், 7 ஆகஸ்ட், 2014

போர்க்குற்றச்சாட்டு சாட்சியங்களை தடுக்கும் செயற்பாட்டில் அரசாங்கம்...!!!

இலங்கையின் உள்நாட்டு போர் தொடர்பிலான சாட்சியங்களை வழங்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் திட்டமிட்டு தடுக்கிறது என்று சிவில் சமூக குழுக்கள் குற்றம் சுமத்தியுள்ளன.
2009 ஆம் ஆண்டு போருக்கு பின்னர் அரசாங்கத்தின் மீது ஆயிரக்கணக்கானோர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் போர்க்குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் இலங்கை அரசாங்கம் குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்ளவில்லை என்ற அடிப்படையில் கடந்த மார்ச் மாதத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை சர்வதேச விசாரணைக்கு ஒப்புதல் வழங்கியது.

எனினும் விசாரணையாளர்களுக்கு விசா வழங்கப் போவதில்லை என்று இலங்கை அரசாங்கம் கூறிவருகிறது.

இதன் அடிப்படையிலேயே இலங்கையில் இருந்து சாட்சியங்கள் சென்று விடக்கூடாது என்ற விடாப்பிடியில் இலங்கை அரசாங்கம் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.


இந்தநிலையிலேயே அரச சார்பற்ற நிறுவனங்கள் ஏற்பாடு செய்யும் நிகழ்வுகளை அரசாங்கம் தடை செய்து வருகிறது என்று சமூக ஜனநாயக நிலையத்தின் பணிப்பாளர் குசல் பெரேரா குற்றம் சுமத்தியுள்ளார்.

போர்க்குற்றங்கள் தொடர்பில் சாட்சியங்களை வெளியிடக் கூடியவர்கள் என்ற வகையில் ஊடகவியலாளர்களை பாதிக்கப்பட்ட தமிழர்கள் கருதுவதன் காரணமாக அவர்கள் அரச சார்பற்ற நிறுவனங்களுடன் தொடர்பு கொள்வதை அரசாங்கம் தடுத்து வருவதாக ட்ரான்பேரன்சி இன்டர்நெசனல் அமைப்பின் பணிப்பாளர் வெலியமுனே சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக