இந்த மாத இறுதியில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பாகிஸ்தானுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
எனினும் இதற்கான உரிய திகதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இந்த விஜயத்தின்போது இலங்கை ஜனாதிபதி பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப்பை சந்தித்து இருதரப்பு நலன்கள் குறித்து கலந்துரையாடவுள்ளார்.
இரண்டு நாட்டு வெளியுறவு செயலாளர்களின் சந்திப்பு ஒன்று இஸ்லாமாபாத்தில் இடம்பெற்ற நிலையிலேயே ஜனாதிபதியின் பயண அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்திய அழுத்தம் காரணமாக பாகிஸ்தானில் இருந்து வெளியேறிய அகதிகளை இலங்கை நாடு கடத்திக் கொண்டிருக்கும் நிலையிலும் இந்தியாவில் வேவு பார்த்ததாக குற்றம் சுமத்தப்பட்ட பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரக அதிகாரி இலங்கையில் இருந்து வெளியேறியுள்ள நிலையிலுமே மஹிந்த ராஜபக்சவின் பாகிஸ்தான் விஜயம் அமைகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக