வியாழன், 7 ஆகஸ்ட், 2014

ஜே.வி.பி கைவிட்டதைத் தொடர்வோம்: முதலாம் முன்னணி....!!!!!!

இலங்கையின் அரசியலில் தசாப்த காலத்திற்கு மேலாக ஜனநாயகம் மற்றும் சுதந்திரம் தொடர்பில் பாரதூரமான பிரச்சினைகள் இருந்து வருவதாக முதலாம் முன்னணி என்ற அமைப்பின் நடவடிக்கை குழுவின் உறுப்பினர் கெலும் அமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக ஜே.வி.பி ஆரம்பித்த போராட்டத்தை அவர்கள் இடையில் கைவிட்டு விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையின் அரசியலில் இல்லாது போயுள்ள ஜனநாயகம் மற்றும் மனித சுதந்திரத்தை மீண்டும் ஏற்படுத்திக் கொடுப்பதற்காக மக்களை அணி திரட்டும் நோக்கில் இந்த முதலாம் முன்னணி அமைப்பு ஏற்படுத்தப்பட்டது.


முதலாம் முன்னணியின் செயற்பாடுகள் குறித்து எதிர்வரும் 15 ஆம் திகதி நடைபெறும் அமைப்பின் அறிமுகத்திற்கான முதலாவது கூட்டத்தில் வெளியிடப்படும் எனவும் கெலும் அமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில், முன்னாள் மீன்பிடி மற்றும் நீரியல் வள அமைச்சரும் ஜே.வி.பியின் முன்னாள் அரசியல் சபை உறுப்பினருமான சந்திரசேன விஜேசிங்க, சட்டத்தரணி நந்த முருத்தெட்டுவேகம ஆகியோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக