"தமிழரசுக் கட்சியை விட பல மடங்கு மதிப்புள்ள கட்சிதான் தமிழர் விடுதலைக் கூட்டணி" - என்று தெரிவித்திருக்கின்றார் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி. தமிழ்க் கூட்டமைப்பில் புளொட், தமிழர் விடுதலைக் கூட்டணி போன்றவற்றை இணைத்தமையை தமிழ்க் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கின்றனர்"- என்ற சாரப்பட மட்டக்களப்பு மாவட்ட எம்.பியான
சீனித்தம்பி யோகேஸ்வரன் வெளியிட்ட கருத்துக்குப் பதில் தரும் வகையில் தாம் விடுத்த அறிக்கை ஒன்றிலேயே ஆனந்தசங்கரி இப்படித் தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையின் விவரம் வருமாறு:- அரசியலும் தெரியாமல், வரலாறும் தெரியாமல் தமிழ் மக்களின் பிரச்சினை பற்றி பேசுவதாக நினைத்துக் கொண்டு அரசியல் வியாபாரம் செய்யும் தம்பி யோகேஸ்வரன் போன்றவர்களால்தான் தமிழ் மக்களின் பிரச்சினை நீண்டு கொண்டே போகின்றது. அனைத்துக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து செயற்பட்டு, அதன் மூலம் பிரச்சினை தீர்ந்து விட்டால் யோகேஸ்வரன் போன்றோருக்கு எதைச் சொல்லி மக்களிடம் பிரச்சாரம் செய்து அரசியல் வியாபாரம் செய்து பிழைப்பது என்ற பயத்தில் அனைத்து சக்திகளும் ஒன்று சேர்வதை தடுப்பதிலேயே அவர் குறியாக இருக்கின்றார்.
தம்பி யோகேஸ்வரன் கூறுவது போல் தமிழரசுக் கடசிக்கு எந்தளவிற்கு மதிப்பு இருந்ததோ அதைவிட பல மடங்கு மதிப்பும் மரியாதையும் மிக்க கட்சிதான் தமிழர் விடுதலைக்கூட்டணி என்பது தெரியாதமை விந்தையாகவுள்ளது. அவர் குறிப்பிட்ட மதிப்புள்ள தமிழரசுக் கடசியை விட இன்னும் பலமான மதிப்புள்ள ஒரு கட்சியை உருவாக்கி ஒற்றுமையுடன் செயற்பட்டால்தான் தமிழ் மக்களுக்கு விடிவு கிடைக்கும் என்ற நோக்கத்திலேயே தமிழரசுக் கட்சியைத் தூக்கி மூட்டை கட்டி வைத்துவிடடு அனைத்து தரப்பினரையும் ஒன்று சோர்த்து தந்தை செல்வா அவர்கள் தமிழர் விடுதலைக் கூட்டணியை உருவாக்கினார் என்ற சாதாரண விடயம் கூட தெரியாமல் அரசியல் பேசுவதுதான் தமிழ் மக்களின் சாபக் கேடாகிவிட்டது தமிழர் விடுதலைக் கூட்டணி பிரதான எதிர்கட்சியான வரலாறு தெரியாத நபர், முதன் முதலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமையில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட விவரம் கூட தெரியாமல் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கவும், அதைப்பற்றி கருத்துக் கூறவும் என்ன தகுதி இருக்கின்றது?
கூட்டமைப்பில் புளொட், தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகியன இணைந்தமையை மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கின்றோம் என “யாழ்ப்பாணம் - மட்டக்களப்பு பிரதேசவாதம்” பேசி மக்களை பிரித்து வைத்து அரசியல் செய்யும் யோகேஸ்வரனுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லையாயினும் இவ்வாறான அரசியல் வியாபாரிகளிடம் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகவே சில விடயங்களை கூற வேண்டியுள்ளது.
இவரைப் போன்றவர்கள் தமிழ் மக்களிடம் அரசியல் பேசி வியாபாரம் செய்வதை இனியும் தமிழர் விடுதலைக் கூட்டணி வெறுமனே பார்த்துக் கொண்டிருக்க மாட்டாது. எனவேதான் இலங்கையில் உள்ள அனைத்து தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதிகளையும் தலைவர்களையும் சந்தித்து கலந்துரையாட தீர்மானித்து, ஏற்கனவே அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது. எந்த ஒரு தமிழ் பேசும் தரப்பையும் ஒதுக்கி வைத்துவிட்டு தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்த்துவிடலாம் என்று நினைப்பது நடக்காத காரியம்.
ஆனால் யோகேஸ்வரன் போன்றோரின் பேச்சைக் கேட்டுக்கொண்டு இதைத்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இப்போது செய்து கொண்டிருக்கின்றது. இதன் மூலம் அவர்கள் எதனையும் சாதித்துவிட முடியாது என்பதனை கூறிவைக்க விரும்புகின்றேன். முள்ளிவாய்க்காலில் எல்லாவற்றையும் இழந்த எம் மக்களுக்குத்தான் தெரியும் அவர்களின் வலியும் வேதனையும். அதனைப் பார்த்த பின்பும் எமக்குள் ஒற்றுமையாக செயற்பட தமிழத் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களுக்குத் தெரியவில்லை.
எனவேதான் இந்த நிலையை நீடிக்கவிடாது, தந்தை செல்வாவின் வழியில் அனைத்து தரப்பையும் தமிழர் விடுதலைக் கூட்டணி சந்தித்து கலந்துரையாடி ஒரு நல்ல முடிவை நாடி நகர்ந்து கொண்டிருக்கின்றது. ஒற்றுமையை விரும்பாத யோகேஸ்வரனைப் போன்றோர்களுக்கு இது கசப்பாகத்தான் இருக்கும். என்ன செய்வது தமிழ் மக்களுக்கு அதுதான் சிறந்த மருந்து. தம்பி யோகேஸ்வரன் விரும்பினால் இலங்கையில் தமிழர்களின் வரலாறு, தமிழரசுக் கட்சியின் வரலாறு, தமிழர் விடுதலைக் கூட்டணியின் வரலாறு, உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்ட தமிழத் தேசியக் கூட்டமைப்பின் வரலாறு, தமிழரசுக் கடசியின் வீட்டு சின்னத்தில் போட்டியிடும் தமிழத் தேசிய கூட்டமைப்பின் வரலாறு ஆகியவற்றை தெளிவாக விளக்க முடியும். அதன் பிறகாவது கூட்டங்களில் ஒழுங்காக பேசலாம் - என்று உள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக