வியாழன், 28 ஆகஸ்ட், 2014

மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார்: விக்னேஸ்வரன்!!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என வட மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண சபை மற்றும் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து பேச்சுவார்த்தை நடாத்த விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு முதல்வரை சந்திக்க விரும்புவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டிருந்த கருத்தக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனைத்
தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழ் மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் குறித்து விபரித்து கடிதமொன்றை அண்மையில் இந்தியா விஜயம் செய்திருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளிடம், விக்னேஸ்வரன் அனுப்பி வைத்திருந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தியப் பிரதமரின் அழைப்பு கிடைத்தவுடன் தாம் உடனடியாக இந்தியாவிற்கு விஜயம் செய்ய ஆயத்தமாக இருப்பதாக விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார் என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக