வியாழன், 14 ஆகஸ்ட், 2014

கிணறுக்குள் கிணறு தோண்டும் கிளிநொச்சி மக்கள்!!


கிளிநொச்சி மாவட்டத்தில் 10 ஆயிரத்து 172 குடும்பங்களை சேர்ந்த 44 ஆயிரத்து 319 பேர் குடிநீரை பெறுவதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக  அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

குடிநீரை பெற முடியாது தவிக்கும் மக்களுக்கு கிளிநொச்சி மாவட்ட செயலகம், பிரதேச சபைகள், பாதுகாப்பு தரப்பினர், அரசசார்பற்ற நிறுவனங்கள் ஊடாக குடிநீர்
விநியோகிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரணைமடு நீர்தேக்கத்தில் நீர் வற்றியுள்ளதன் காரணமாக தண்ணீர் பிரச்சினை உக்கிரமடைந்திருப்பதாக அரசாங்க அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

கிளிநொச்சியில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக அங்குள்ள மக்கள் தமது கிணறுகளை மேலும் ஆழமாக தோண்டும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக