புதன், 13 ஆகஸ்ட், 2014

வவுனியாவில் தனியார் கல்வி நிலையங்களுக்கு கட்டுபாடுகள் விதிக்குமாறு அந்தணர் ஒன்றியம் கோரிக்கை!!

வவுனியா நகரப் பகுதியில் இயங்குகின்ற தனியார் கல்விநிலையங்களை கட்டுப்படுத்தி அறநெறி வகுப்புக்கள் நடத்த உதவி செய்யுமாறு வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜாவிடம் வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியம் கோரிக்கைவிட்டுள்ளது.

அறநெறி வகுப்புக்கள் இடம்பெறுகின்ற போது தனியார், பிரத்தியேக வகுப்புக்களை தடைசெய்வது தொடர்பாக வவுனியா அந்தணர் ஒன்றிய பிரதிநிதிகள் வடமாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டு இளைஞர் விவகார அமைச்சர் கௌரவ த.குருகுலராஜா அவர்களை சந்தித்து கலந்துரையாடி வேண்டுகோள் கடிதம் கையளித்துள்ளனர்.

எமது கலை, கலாசாரத்தை பாதுகாக்கும் நோக்குடனும் அறநெறி வகுப்புக்களை தடையின்றி நடத்தக் கூடியதாகவும் பிரதி ஞாயிற்றுக் கிழமைகளிலும் பௌர்ணமி தினங்களிலும் காலை 9 மணியில் இருந்து மதியம் 12 வரை அனைத்து தனியார் கல்வி நிலைய வகுப்புக்கள், பிரத்தியேக வகுப்புக்கள், பிற கலை வகுப்புக்கள் என்பவற்றை தடை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக