செவ்வாய், 1 ஜூலை, 2014

வெளிநாட்டு விஜயங்களின் போது அமைச்சர்களின் செயற்பாடு குறித்து ஜனாதிபதி ஆலோசனை.....!!!

வெளிநாட்டு விஜயங்களின் போது அமைச்சர்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆலோசனை வழிகாட்டல்களை வழங்கியுள்ளார்.
ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்,  அமைச்சர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென்பது குறித்து ஆலோசனை வழங்கியுள்ளார்.

வெளிநாட்டு விஜயங்களின் போது சில நியதிகளை பின்பற்ற வேண்டியது அவசியமானது என வலியுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக வெளிநாட்டு விஜயங்களின் போது எவ்வாறு அரசாங்கப் பணத்தை பயன்படுத்துவது என்பது குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரச நிதி முகாமைத்துவம் மற்றும் சரியான பயன்பாடு என்ற தொனிப் பொருளில் இந்த நியதிகள் உருவாக்கப்பட்டுளளன.


இந்த நியதிகள் தொடர்பிலான ஆவணமொன்று ஏற்கனவே அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள்,  உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும், இந்த புதிய நியதிகள் அடங்கிய ஆவணத்தில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஆளுனர்களின் விஜயங்கள் தொடர்பில் எவ்வித கட்டுப்பாடுகளும் பிறப்பிக்கப்படாமை ஆளும் கட்சியினருக்கு இடையில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக