செவ்வாய், 1 ஜூலை, 2014

போர்க்குற்றங்களுக்கு எதிராக மக்களை தூண்டிவிட அரசாங்கம் திட்டம்....!!!

போர்க்குற்ற விசாரணைகளுக்கு எதிராக மக்களை தூண்டி விடுவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளவுள்ளது.
இதற்காக தொகுதி வாரியாகவுள்ள அரசாங்க உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில், பொரளையில் நடைபெற்ற அரசாங்க தரப்பு உறுப்பினர்களுக்கான மாநாடு அமைந்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த மாநாடு எதிர்வரும் தேர்தல்களை இலக்கு வைத்து நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் இது போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

போர்க்குற்ற விசாரணைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசாங்கம் பாராளுமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றிக் கொண்டுள்ள போதும், மக்களிடம் இருந்து பாரிய அளவில் எதிர்ப்புகள் வெளியாகவில்லை.



இந்த நிலையில் மக்களை தூண்டிவிட்டு போர்க்குற்ற விசாரணைக்கு எதிராக போராட்டங்களை நடத்த வைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக