வெள்ளி, 6 ஜூன், 2014

வடக்கு மாகாண சபையின் நியதி சட்ட ஆக்கம்; இரு நாள் கருத்தரங்கு யாழ்ப்பாணத்தில்!!

வடக்கு மாகாண சபையின் நியதி சட்ட ஆக்கம் சம்பந்தமான இரண்டு நாள் கருத்தரங்கு யாழ்ப்பாணம் பொது நூலகத்தில அமைந்துள்ள வட மாகாண சபையின் மாநாட்டு மண்டபத்தில் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 10 மணிக்கு வடக்கு மாகாண சபை அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தலைமையில் இடம் பெற்றது.

வடக்கு மாகாண முதலமைச்சரின் அறிமுகவுரையைத் தொடர்ந்து நடை பெற்ற கருத்தரங்கில், வடக்கு மாகாண சபையின் உறுப்பினர்கள் எதிர்
கட்சித்தலைவர் எஸ்.தவராசா உட்பட ஏனைய உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். அரசியல் யாப்புக் கற்கை நெறிகளுக்கான அமைப்பின் ஏற்பாட்டில் இடம் பெறும் இக்கருத்தரங்கில் கொழும்பில் இருந்து வருகைதந்துள்ள சட்டதரணிகள் உட்பட பலர் கலந்துகொண்டுள்ளார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக