ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 25 ஆவது பேராளர் மாநாடு கொழும்பில் எதிர்வரும் 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. கொழும்பு புதிய நகர மண்டபத்தில், முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும், நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெறும் இந்தப் பேராளர் மாநாட்டில் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் 1200 பேராளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர் என்று முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமும், பாராளுமன்ற உறுப்பினருமான
எம்.ரி.ஹஸனலி தெரிவித்தார்.
மாநாட்டில், இன்றைய முக்கிய அரசியல் சூழ்நிலை, முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள பேரினவாத, இனவாத நெருக்கடிகள் தொடர்பில் தலைவர் ரவூப் ஹக்கீம் முக்கிய உரையாற்றுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. மாநாட்டின்போது புதிய செயற்குழு உறுப்பினர்களும் தெரிவுசெய்யப்படவுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக