திங்கள், 4 ஜனவரி, 2010

முல்லைத்தீவில் 12 ஆயிரம் பேர் இதுவரையில் மீளக் குடியேற்றம் - முல்லைத்தீவு அரச அதிபர் தெரிவிப்பு..!!

முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்று திங்கட்கிழமையும் நாளை மறுதினம் புதன்கிழமையும் 1,200 பேர் மீளக்குடியமர்த்தப்பட வுள்ளனர் என முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். இதுவரை 12 ஆயிரம் பேர் முல்லைத் தீவில் குடியமர்த்தப்பட்டுள்ளனர் எனவும் அவர் கூறினார்.இதுதொடர்பாக அவர் மேலும் கூறி யவை வருமாறு முல்லைத்தீவு மாவட்டத்தில் இதுவரை 12 ஆயிரம் பேர் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளனர். முகாம்களிலுள்ள ஏனை யோரையும் கட்டம் கட்டமாகக் குடியேற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றோம். இன்று திங்கட்கிழமை ஏ 9 வீதியின் மேற்குப் பக்கமாக ஒட்டுசுட்டான் உதவி அரச அதி பர் பகுதியிலுள்ள கிராமங்களிலும் எதிர் வரும் புதன்கிழமை மாந்தை கிழக்கிலும் மக்கள் மீளக்குடியமர்த்தப்படவுள்ளனர். மேலும் 1,200 பேர் மீளக்குடியமர்த்தப்படவுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள சேதமடைந்த அரச கட்டடங்கள் மற்றும் வீடுகளை புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. புனரமைக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் கட்டம் கட்டமாக மீளக்குடியமர்த்தப்படுவார்கள் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக