இந்தியாவில் பிறந்த சுமார் 17ஆயிரம் இலங்கை பிள்ளைகள் உரிய பதிவுகள் இன்றி நாடற்ற நிலையில் உள்ளதாக தெ ஹிந்து தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் இந்தியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரம் இவர்களுக்கு உதவ முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈழம் அகதிகள் புனர்வாழ்வு அமைப்பின் நிறுவுனர் சந்திரஹாசன் இது தொடர்பில் வெளியிட்டுள்ள தகவலில்,
குறித்த பிள்ளைகளை பதிவு செய்வதற்காக ஆரம்பிக்கப்பட்ட நடமாடும்
சேவையை தமிழக அரசாங்கம் நிறுத்தியமையை அடுத்து இந்த விடயம் கிடப்பில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை பிள்ளைகளுக்கு பிறப்புச் சான்றிதழ்களை பெற்றுக்கொள்வதற்கு அவர்களின் பெற்றோர்களுக்கு பிறப்பு சான்றிதழ்கள் தேவை.
எனினும் பெரும்பாலான பெற்றோருக்கு பிறப்பு சான்றிதழ்கள் இல்லை என்றும் சந்திரஹாசன் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழகத்தில் தற்போது 25 மாவட்டங்களில் உள்ள 110 முகாம்களில் 66000 இலங்கை தமிழ் அகதிகள் வசித்து வருகின்றனர்.
இதனை தவிர 34ஆயிரம் அகதிகள் முகாம்களுக்கு வெளியில் வசிக்கின்றனர்.
போராளிகள் என்று கருதப்படுவோர் விசேட முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக