வவுனியா பொது வைத்தியசாலையில் செவிப்புலன் அற்றோருக்கான இருநாள் சிகிச்சையளிக்கப்பட்டு செவிப்புலன் கேள் கருவி வழங்கல் நிகழ்வொன்று இடம்பெறவுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கு.அகிலேந்திரன் தெரிவித்தார்.
பாதுகாப்பு படைகளின் வன்னி கட்டளைத் தலைமையகத்தின் அனுசரணையுடன் அரச சார்பற்ற தொண்டு நிறுவனமொன்றினால் எதிர்வரும் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் (4, 5) வவுனியா பொது வைத்தியசாலையில் செவிப்புலன் அற்றோருக்கான விசேட சிகிச்சை முகாம் இடம்பெறவுள்ளது.
இதன் பிரகாரம் செவிப்புலன் கருவிகள் தேவையுடையோருக்கு இலவசமாக
கருவிகளையும் வழங்குவதற்கு ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனவே இச்சிகிச்சையினையும் கருவியினையும் பெற விரும்புபவர்கள் வவுனியா பொது வைத்தியசாலையின் காது, தொண்டை தொடர்பான சிகிச்சை நிலையத்தில் உடன் தமது பெயர் விபரங்களை பதிவு செய்து கொள்ளும் பட்சத்தில் சிகிச்சையினை இலகுவாக பெற முடியும் என தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக