செவ்வாய், 10 ஜூன், 2014

வேள்விக்கு எதிரான வழக்கு நாளை வரை ஒத்திவைப்பு!!

கீரிமலை கானாவத்தை  ஆலயத்தில் எதிர்வரும் சனிக்கிழமை  நடைபெறவுள்ள வேள்வியை தடுத்து நிறுத்தவேண்டும் எனக்கோரி மல்லாகம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று நீதிபதி திருமதி ஜோய் மகிழ் மகாதேவா முன்னிலையில் விசாரணைக்கு இரண்டாவது நாளாகவும் எடுத்துக் கொள்ளப்பட்டது.

இன்று நடைபெற்ற விசாரணையைத் தொடர்ந்து நாளை புதன்கிழமை தீர்ப்பு
வழங்கப்படும் எனக் கூறி வழக்கை ஒத்திவைத்தார். இதேவேளை, குறிப்பிட்ட வழக்கு சம்பந்தமாக ஆலயத்தின் சார்பில் பலர் நீதிமன்றத்துக்குச் சமுகமளித்திருந்த போதிலும் வழக்காளிகள் தரப்பில் வழக்காளிகள் மட்டுமே சமுகமளித்திருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக