செவ்வாய், 10 ஜூன், 2014

நரேந்திரமோடி, ஜெயலலிதா ஆகியோருக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்!!


இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆகியோருக்கு எதிராக அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்துக்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கை விவகாரத்தில் தலையிடவேண்டாம் என்று வலியுறுத்தியே அக்குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேசிய அமைப்பின் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த
எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பிரதமர் நரேந்திரமோடி, தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆகியோரின் உருவப்படங்கள் தாங்கிய பாதைகளை கைகளில் ஏந்திய வண்ணம் கோஷங்களை எழுப்பினர். இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமிழக முதல்வர் ஜெயலிதாவின் பெரிய அளவிலான உருவப் பொம்மை ஒன்றை தீயிட்டுக் கொளுத்தினர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக