கராச்சி விமான நிலைய பாதுகாப்பு படை விடுதி மீது தீவிரவாதிகள் இன்று மதியம் தாக்குதல் நடத்தியுள்ளனர். தற்போது கராச்சி விமான நிலைய வளாகத்தில் உள்ள பாதுகாப்பு படை விடுதி மீது, தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதலையடுத்து தீவிரவாதிகள் - பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது.
தீவிரவாதிகள் பதுங்கியுள்ள கட்டடடம் ராணுவத்தால் சுற்றி
வளைக்கப்பட்டுள்ளது. தீவிரவாதிகள் தாக்குதலையடுத்து கராச்சியில் விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களில் கராச்சி விமான நிலையம் மீது 2 முறை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவத்தால் அந்நாட்டில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக