முல்லைத்தீவு முள்ளியவளைப் பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்கான ஒருவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். மற்றுமொருவர் காயமடைந்தநிலையில் மாஞ்சோலை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்றிறவு 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தையான
நாகதேவன் குமார் (வயது - 37) என்பவரே உயிரிழந்துள்ளார்.
கந்தையா வசீகரன் (வயது - 23) என்பவர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகிறார். இவர்கள் மீது கத்திக்குத்து மேற்கொண்ட நபர் தலைமறைவாகியுள்ளார் என்றும் இவரை தாம் தேடிவருகின்றோம் எனவும் முள்ளியவளைப் பொலிஸார் தெரிவித்தனர். குடும்பத் தகராறு காரணமாக ஏற்பட்ட மோதலே கத்திக்குத்துக்குக் காரணம் என்று தெரியவருகிறது. விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக