சனி, 7 ஜூன், 2014

தமிழ் மொழிக்கும் சரிநிகர் அந்தஸ்து வேண்டும்: கொழும்பு மாநகர சபையில் தீர்மானம்!!

தமிழ் மொழிக்கு மற்றைய மொழிகளுக்கு உள்ள அந்தஸ்தும் சமவாய்ப்பும் வழங்கப்படவேண்டும் என்ற பிரேரனை கொழும்பு மாநகர சபையில் ஏனமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இது தொடர்பான பிரேரணையை ஜனநாயக மக்கள் முன்ணணி ஊடக செயலாளரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான பாஸ்கரா சமர்ப்பித்தார்.

அதில் தமிழ் மொழிக்கு மற்றைய மொழிகளுக்கு உள்ள அந்தஸ்தும்
சமவாய்ப்பும் வழங்கப்படவேண்டும் என்றும் மொழி பெயர்ப்பானது ஒரு தனிப்பிரிவாக இயங்கவைக்கப்பட்டு அப் பிரிவின் கீழ் கொழும்பு மாநகர சபை சுற்றுவட்டாரத்தில் இருக்கக்கூடிய பெயர்ப்பலகைகள் உள்ளிட்டவற்றில் அடங்கியள்ள தமிழ், பிழைகள் உடன் திருத்தப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பிரேரணை ஆளும்,எதிர்க்கட்சி அங்கத்தவர்களின் ஆதரவான நீண்ட நேர உரைகளின் பின் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக