சனி, 7 ஜூன், 2014

ஐ.நா. விசாரணைக்குழு முன்னிலையில் அனைவரும் சாட்சியமளிக்கவேண்டும் - விநாயகமூர்த்தி எம்.பி. கோரிக்கை!!


இலங்கை வரவுள்ள ஐ.நாவின் விசாரணைக்குழு முன்னிலையில் மக்கள் துணிந்து சாட்சியமளிக்க முன்வரவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி கோரிக்கைவிடுத்துள்ளார். இன்று யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை அரசை நம்புவதாலோ தற்போது ஆட்சிக்கு
வந்துள்ள இந்திய அரசை நம்புவதாலோ தமிழ் மக்களுக்கு எந்த வித தீர்வும் கிடைக்கப்போவதில்லை.

தமிழ் மக்களுக்கு இருக்கக்கூடிய ஒரே நம்பிக்கை ஐ.நாவின் விசாரணைக்குழு மாத்திரமே. எனவே தமிழ் மக்கள் அனைவரும் விசாரணைக்குழு முன்னிலையில் சென்று சாட்சியமளிக்கவேண்டும்.அந்த குழுமுன்னிலையில் நானும் சென்று சாட்சியமளிப்பேன். ஐ.நா. விசாரணைக்குழு போருக்கு முன்னர் இடம்பெற்ற குற்றச்செயல்கள் தொடர்பிலே விசாரணை நடத்தவுள்ளது. ஆனால் போருக்குப் பின்னரும் நடைபெற்றுவரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலும் அறிக்கையிடப்படல் வேண்டும்.- என்றும் அவர் மேலும் தெரிவித்தார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக