செவ்வாய், 20 ஜனவரி, 2015

நேற்றும் மஹிந்தவின் உருவப்படம் பொறித்த 2500 கடிகாரங்கள் மீட்பு..!!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் உருவப்படம் பொறித்த 2500 கடிகாரங்கள், அவரது சொந்த ஊரான வீரகெட்டிய, இங்குருமூலன பகுதியில் இருந்து நேற்று மீட்கப்பட்டுள்ளன.
இதேவேளை சப்புகஸ்கந்த களஞ்சியசாலையொன்றில் நேற்று முன்தினம் 68,000 கடிகாரங்கள் மீட்கப்பட்ட நிலையில், நேற்றும் 2500 கடிகாரங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன நேற்று தெரிவித்தார்.

இந்தக் கடிகாரங்களின் பெறுமதி சுமார் 199,000 அமெரிக்க டொலர் பெறுமதி எனவும் தனியார் வர்த்தகர் ஒருவரே இவற்றை சீனாவில் இருந்து கொண்டு வந்துள்ளார் என்பதும் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.


இதேவேளை சப்புகஸ்கந்தையில் மாதம் ஒன்றுக்கு 15 லட்சம் ரூபா வாடகைப் பணம் செலுத்தி மேற்படி களஞ்சியசாலை பயன்படுத்தப்பட்டு வந்துள்ளதுடன் நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களுக்கான வாடகைப் பணமான 45 லட்சம் ரூபா பணம் செலுத்தப்பட்டிருப்பதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

இதேவேளை சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மேற்படி கடிகாரங்கள் இலங்கை சுங்கத்திணைக்களத்தின் ஊடாக கொண்டு வரப்பட்டதா என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக