வெள்ளி, 13 ஜூன், 2014

ஜனாதிபதி தேர்தல் பற்றி விரைவில் அறிவிப்பு...!!!!!

ஜனாதிபதி தேர்தல் பற்றி விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் நவம்பர் மாதம் 18ம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச,  இரண்டாம் தவணைக்கான பதவிப் பிரமாணம் செய்து கொண்டு நான்கு ஆண்டுகள் பூர்த்தியாகின்றன.

பதவிப் பிரமாணம் செய்து கொண்டு நான்கு ஆண்டுகளின் பின்னர் ஜனாதிபதி தேர்தலை நடாத்த அரசியல் சாசனத்தில் சந்தர்ப்பம் உள்ளது. இதன் அடிப்படையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எதிர்வரும் நவம்பர் மாதம் 18ம் திகதியின் பின்னர் ஜனாதிபதி தேர்தல் நடத்துவதற்கான உசிதமான திகதி ஒன்றை அறிவிப்பார் என தெரிவிக்கப்படுகிறது.



கிரக நிலைகளுக்கு அமைவாக எப்போது தேர்தலினை நடத்தினால் வெற்றியீட்ட முடியும் என்பது குறித்து ஜனாதிபதி ஏற்கனவே ஜோதிட நிபுணர்களிடம் ஆலோசனை பெற்றுக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பெரும்பாலும் எதிர்வரும் ஆண்டு ஜனவரி மாத நடுப்பகுதியளவில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக