வெள்ளி, 13 ஜூன், 2014

புலிகளின் போர்க்குற்றச் செயலில் கூட்டமைப்பின் பங்களிப்பு குறித்து விசாரணை சிங்கள ஊடகம்..!!!

தமிழீழ விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட குற்றச் செயல்களுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்களிப்பு தெடர்பில் விசாரணை நடத்தப்படவுள்ளது. சிங்களப் பத்திரிகையொன்று இது பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போர்க்குற்றச் செயல்களில் அளித்த பங்களிப்பு குறித்து விரிவான விசாரணைகளை நடாத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

படையினரை போர்கு; குற்றவாளியாக்கும் முயற்சியில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவை ஆணையாளர் நவனீதம்பிள்ளை ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த விசாரணைகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சாட்சியமளிக்கத் தயார் என அறிவித்துள்ளதாகவும், அதற்கு எதிர்ப்பை வெளியிடும் நோக்கில் விசாரணை நடத்தப்படவுள்ளதாகவும் உயர் அரசாங்க அதிகாரியொருவர்
தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் விசாரணைகளுக்கு சாட்சியமளிக்கத் தயார் என கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

சாட்சிகளை திரட்டும் நோக்கில் சட்டத்தரணி ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளார்.

நல்லிணக்கத்திற்கு கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்கவில்லை,  புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டனர் என பல்வேறு வழிகளில் அரசாங்கம், கூட்டமைப்பிற்கு எதிராக குற்றம் சுமத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக