வெள்ளி, 13 ஜூன், 2014

வடமாகாணத்துக்கு தனி காவற்துறை பிரிவு உறுப்பினர் சிவாஜிலிங்கம்...!!!!

வடமாகாணத்துக்கான தனி காவற்துறை பிரிவு தொடர்பில் வடமாகாண சபையின் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் வெளியிட்டிருந்த கருத்து, தென்னிலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வடமாகாண சபைக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி அண்மையில் நிதிச் நியதி சட்ட மூலங்கள் சபைப்படுத்தப்பட்டன.

இந்த நிலையில் வடக்கு மாகாணத்துக்கான தமிழ் பேசும் தனி காவற்துறை பிரிவினை உருவாக்கும் நியதி சட்ட மூலத்தை சமர்ப்பிக்கவிருப்பதாக அவர் அறிவித்துள்ளார்.

இதன் அவசியம் குறித்து ஏற்கனவே கடந்த மாகாண சபைக் கூட்டத்தின் போது அவர் தெளிவுபடுத்தியிருந்தார்.



ஏற்கனவே வடமாகாண சபைக்கான தேர்தலின போது, வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் வடக்குக்கு தனி காவற்துறை பிரிவை உருவாக்க முற்படுவார் என்று,  பேரினவாத கட்சிகள் பிரசாரம் செய்து வந்தன.

இந்த நிலையில் சிவாஜிலிங்கத்தின் இந்த கருத்து மேலும் சர்ச்சையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக