செவ்வாய், 17 ஜூன், 2014

அமெரிக்காவை நெருங்க ஆலோசனை கொடுக்குமாறு இலங்கை அரசாங்கம் பாகிஸ்தான் சட்ட ஆலோசகரிடம் கோரிக்கை!!

அமெரிக்காவுடன் நெருக்கமான தொடர்புகளை கொண்டுள்ள நாடுகள் மற்றும் அமெரிக்காவுக்கு அழுத்தங்களை கொடுக்கக் கூடிய பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்த சந்தர்ப்பம் ஒன்றை ஏற்படுத்திக் கொடுக்குமாறு இலங்கை அரசாங்கம் பாகிஸ்தான் சட்ட ஆலோசகர் ஒருவரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

பாகிஸ்தானின் சிரேஷ்ட சட்ட
ஆலோசகரான கலாநிதி மொஹமட் அசாம் சௌதிரியிடம் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இராஜதந்திர துறையில் பிரபலமான சட்ட ஆலோசகரான சௌதிரியிடம் இலங்கை தொடர்பாக ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவில் மேற்கொள்ளப்படவுள்ள சர்வதேச விசாரணை சமபந்தமான ஆலோசனைகளை பெற அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

மொஹமட் அசாம் சௌதிரி, கடந்த மாதம் இலங்கைக்கு விஜயம் செய்து, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களுடன் இந்த விடயம் சம்பந்தமாக பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார்.

இந்த சந்திப்புகளில் விடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு அமைய சௌதிரி தனது பணிகளை ஆரம்பித்துள்ளார்.

இந்த பணிகளின் முன்னேற்றம் குறித்து அடுத்த வாரம் அமைச்சர் பீரிஸூக்கு அவர் அறிவிக்க உள்ளதாக அரசாங்கத்தின் உயர்தரப்பு வட்டாரத் தகவல்கள் தெரிவித்தன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக