ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையினால் நியமிக்கப்பட்ட இலங்கை தொடர்பான விசாரணைக் குழு இந்த மாதம் முதல் தனது விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளதாக மனித உரிமைப் பேரவையின் பேச்சாளர் ருபர்ட் கொல்வில்லி தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 2015ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அமர்வுகளின் போது இந்த அறிக்கை சமர்பிக்கப்பட உள்ளதாகத்
தெரிவித்துள்ளார்.
முதலில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் முன்னிலையில் இலங்கை குறித்த விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும் அதன் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேவை ஏற்பட்டால் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையின் முன்னிலையில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார். பத்து மாத காலம் விசாரணைகள் நடத்தப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் ஆண்டு மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட முன்னதாக வாய் மொழி மூலமும் எழுத்து மூலமும் இலங்கையின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த சந்தர்ப்பம் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
விசாரணைக் குழுவின் முன்னிலையில் சாட்சியமளிப்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு சகல விதமான ஏற்பாடுகளும் செய்யப்படும் என கொல்வில்லி தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக