வெள்ளி, 13 ஜூன், 2014

வவுனியா பூந்தோட்டம் கலைமகள் முன்பள்ளிக்கு, கோவில்குளம் இளைஞர் கழகத்தால் புத்தக பைகள் அன்பளிப்பு!!(படங்கள் இணைப்பு)

முன்பள்ளி ஆசிரியர்களான  ச.கேதீஸ்வரி,  சி.ராகினி  ஆகியோரின் வேண்டுகோளிற்கு இணங்க,  வவுனியா பூந்தோட்டம் கலைமகள் முன்பள்ளிக்கு கோவில்குளம் இளைஞர் கழகத்தால் புத்தக பைகள் இன்று(13/05) அன்பளிப்பு செய்யப்பட்டது. கோவில்குளம் இளைஞர் கழகத்தின் அமெரிக்க கிளையின் சமூக ஆர்வலர் விஸ்ணு அவர்களினால் அன்பளிப்பு செய்யப்பட்ட  புத்தக பைகளினை, வவுனியா கோவில்குளம் இளைஞர் கழக ஸ்தாபாகரும் வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதாவுமாகிய திரு க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்கள் முன்பள்ளி ஆசிரியர்களான  ச.கேதீஸ்வரி,  சி.ராகினி ஆகியோரிடம் கையளித்தார். 



இவ் நிகழ்வில் கோவில்குளம் இளைஞர் கழக ஆலோசகர் திரு முத்தையா கண்ணதாசன், கோவில்குளம் இளைஞர் கழக இணைப்பாளர்    காண்டீபன், கோவில்குளம் இளைஞர் கழக தொழிநுட்ப இயக்குனர் சதீஸ், பொருளாளர் நிகேதன், கல்விக்கழக இயக்குனர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர். 

நிகழ்வில் கருத்து தெரிவித்த திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்கள் , "தமிழர்கள் நாம் கல்வியால் எழுவோம்" என்ற உயரிய நோக்குடன் செயல்படும் எமது கழகம் எமது மாணவ செல்வங்களின் கல்வி முன்னேற்றத்தில் என்றும் தூணாக இருக்கும் என தெரிவித்ததுடன், உங்களின் பொன்னான நேரங்களை மீதப்படுத்துவதே எமது கழகத்தின் நோக்கம், எனவே அந்த பொழுதுகளை தங்களின் கல்வி முன்னேற்றத்தில் பயன்படுத்தி நாளைய தேசத்தின் வழிகாட்டிகளாக வர  வாழ்த்துக்களை தெரிவித்தார். 

பூர்வீகம் செய்திகளுக்காக நம் நிருபர் 









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக