ஞாயிறு, 15 ஜூன், 2014

இலங்கையின் மனித உரிமை நிலவரங்கள் கவலையளிக்கின்றன பிரித்தானியா...!!!

இலங்கையின் காணப்படும் மனித உரிமை நிலைவரங்கள் இன்னும் கவலைதரும் வகையிலேயே தொடர்வதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது.
குறிப்பாக வடமாகாணத்தில் நிலைமை மேலும் மோசமாக இருப்பதாக, பிரித்தானியாவின் சிரேஷ்ட அமைச்சர் பரோனெஸ் வர்சி தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய பாராளுமன்றத்தில் வைத்து அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில் இலங்கையின் மனித உரிமை நிலவரங்கள் குறித்து, ஜெனீவாவில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரகத்தின் ஊடாக, இலங்கையின் உயர்ஸ்தானிகரகத்துடன் தொடர்பில் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


மனித உரிமை ஆர்வலர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்படுகின்றமை, சிறுபான்மை மதங்கள் மீதான தாக்குதல்கள் தொடர்கின்றமை,  ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஒன்று கூடல்களுக்கு தடை விதிக்கப்படுகின்றமை போன்ற சம்பவங்கள் தொடர்ந்து இலங்கையில் இடம்பெற்ற வண்ணம் உள்ளன.

இந்த நிலையில் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக மனித உரிமைகள் மாநாட்டில் விசாரணைக்கான பிரேரணை நிறைவேற்றப்பட்டதன் பின்னர்,  இலங்கையின் மோசமான நிலைமைகளை சீர் செய்யும் பொருட்டு சர்வதேச நாடுகளுடன் தொடர்பில் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக