வியாழன், 19 ஜூன், 2014

எமது பிரச்சினைகளுக்கு நாமே தீர்வு காண முடியும டக்ளஸ் தேவானந்தா....!!!

எமது பிரச்சினைகளுக்கு நாமே தீர்வு காண முடியும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.  நாடாளுமன்ற விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேற்குலக நாடுகள் மிகவும் சந்தர்ப்பவாத அடிப்படையில் செயற்படுகின்றன.

தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வருகின்றேன்.  எமது பிரச்சினைகளுக்கு நாமே தீர்வு காண வேண்டும்.

வெளிநாட்டு சக்திகளினால் எமது பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது.  வெளிநாட்டு சக்திகள் தேவையின்றி இலங்கை விவகாரங்களில் தலையீடு செய்தால் மீளவும் பிரச்சினைகள் உருவாக வாய்ப்பு உண்டு.


தமிழ் மக்களின் உரிமைகள் வென்றெடுக்கப்பட வேண்டும். எனினும், வெளிநாட்டு சக்திகள் நாட்டின் உள்விவகாரங்களில் தலையீடு செய்ய அனுமதிக்க முடியாது.

சமாதானம் மலர்ந்துள்ளது,  சமாதானப் புறாவின் கழுத்தை நெறிக்க எவருக்கும் அனுமதியளிக்க முடியாது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக