இலங்கையில், பாகிஸ்தான் தீவிரவாதிகளின் செயற்பாடுகள் எதுவும் கிடையாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.
அண்மையில் இலங்கையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் செயற்பட்டு வருவதாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
இது தொடர்பில் விசாரணை நடத்தியதாகவும் இவ்வாறான தீவிரவாதக் குழுக்கள் இலங்கையில் செயற்படவில்லை எனவும் பாதுகாப்புத் தரப்பினர் அறிவித்துள்ளனர்.
இது தொடர்பில் இலங்கை அரசாங்கம், இந்திய மத்திய அரசாங்கத்திற்கும் அறிவித்துள்ளது.
அண்மையில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்த போது பாகிஸ்தான் தீவிரவாதிகள் தொடர்பில் வினவியிருந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும் இலங்கையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் செயற்பாடுகள் எதுவும் கிடையாது என பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, 75 பாகிஸ்தான் பிரஜைகள் அண்மையில் நாடு கடத்தப்பட்டுள்ளனர். உரிய வீசா அனுமதிப்பத்திரமின்றி நாட்டுக்குள் தங்கியிருந்தவர்களே இவ்வாற நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
30 நாள் சுற்றுலா வீசா மூலம் நாட்டுக்குள் பிரவேசிக்கும் பாகிஸ்தானியர்கள் ஹோட்டல்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொழில் புரிந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சுற்றுலாப் பயணிகளாக இலங்கைக்கு பயணம் செய்யும் பாகிஸ்தானியர்கள் பணம் எதனையும் எடுத்துச் செல்வதில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக