டெங்கு நோய் ஒழிப்பில் அரச அதிகாரிகள், பாதுகாப்புப் படையினர், பொலிஸார் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் ஒன்றிணைந்த வேலைத்திட்டம் அடுத்த வாரம் முதல் அமுலாகும்.
வீட்டுக்கு வீடு சென்று டெங்கு பரிசோதனையுடன், அறிவூட்டல் வேலைத்திட்டமும் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும்.
டெங்கு ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் கூட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற்ற போது இது பற்றித் தீர்மானிக்கப்பட்டது.
பேச்சுவார்த்தையில் மட்டும் நிற்காமல் டெங்கு ஒழிப்புக்கான நடைமுறை வேலைத்திட்டத்தை துரிதமாக ஆரம்பிக்குமாறும் ஜனாதிபதி தெரிவித்தார்.
தத்தம் பகுதியில் துப்புரவு தொடர்பாக உள்ளூராட்சி மன்றங்கள் கவனம் செலுத்த வேண்டும்.
மழை காலத்தில் டெங்கு பெருகுவதால் மக்களை விழிப்பூட்டுவதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது. வீசி எறியும் பாத்திரங்களில் 50 வீதம் நுளம்பு பெருகுகிறது. தண்ணீர் தேங்கும் இடங்களில் 22 வீதம் பரவுகிறது. கட்டட நிர்மாண இடங்களிலும் டெங்கு நுளம்பு பரவுவதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.
மழைக்காக வீடுகளின் கூரைகளில் போடப்படும் பீலிகள் மூலமாகவும் நுளம்பு பெருகுவதால் எதிர்காலத்தில் வீட்டுப் பீலிகள் அமைப்பதை தவிர்ப் பதற்கான வேலைத்திட்டம் அமுலாக்கப்பட வேண்டுமென்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
டெங்கு ஒழிப்பில் சகலரும் ஒன்றுபட்டு பாடுபடுமாறு அமைச்சர் மைத்திரிபால சிரிசேன தெரிவித்தார். ஜனாதிபதி செயலணியின் நடவடிக்கை காரணமாக டெங்கு நோய் குறிப்பிடத்தக்க அளவு கட்டுப்படுத்தப்பட்டதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.
அமைச்சர்களான மைத்திரிபால சிறி சேன பசில் ராஜபக்ஷ, மஹிந்த அமரவீர, பிரதி அமைச்சர் துலிப் விஜேசேகர மற் றும் மாகாண முதலமைச்சர்கள், மேயர்கள், பிரதேச சபைத் தலைவர்கள், ஜனாதிபதி செயலர் லலித் சீரதுங்க உட்பட அமைச்சு செயலாளர்களும், பாதுகாப்பு அதிகாரிகளும் அரச அதிகாரிகளும் கலந்து கொண் டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக