புதன், 11 ஜூன், 2014

பரிசுத்த பாப்பரசர் ஜனவரி 13இல் இலங்கை வருகை..!!!!

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் அடுத்த வருடம் ஜனவரி 13ஆம் திகதி இலங்கை வரவுள்ளார். இவர் 15ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார் என அறிவிக்கப் பட்டுள்ளது. இந்த தகவலை வணக்க த்திற்குரிய கொழும்பு கர்தினால் மல்கம் ரஞ்சித் வெளியிட்டுள்ளார்.

ராகமையில் நடைபெற்ற நிகழ் வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே கர்தினால் இந்த தகவலை வெளியிட்டார்.

பரிசுத்த பாப்பரசரின் இலங்கை விஜயத்தின் போது இலங்கையில் முதலாவது புனிதராக ஜோசப் வாஸ் அடிகளாரை பிரகடனப்படுத்துவதற்கான சாத் தியம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள் ளது. இலங்கை விஜயத்தின் போது அவர் அரச தலைவர்கள், எதிர்க் கட்சி பிரதிநிதிகளையும் சந்திக்க உள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக