ராஜபக்ஷ குடும்பத்தினரின் ஆட்சி, நிர்வாகம் மீது கோபம் கொண்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் குழுவொன்று சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தலைமையில் ஜனாதிபதிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் சிரேஷ்ட அமைச்சர் தலைமையிலான இந்த அமைச்சர்கள் குழு அரசாங்கத்தில் இருந்து வெளியேறி இந்த போராட்டத்தில் இறங்க தீர்மானித்துள்ளது.
போராட்டத்தில் ஈடுபட போகும் அமைச்சர்கள் குழுவில் தினமும்
ஜனாதிபதியை துதி பாடிய ஒருவரும் இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே 12 அமைச்சர்கள் இந்த போராட்டத்தில் இறங்க இணங்கியுள்ளனர்.
எதிர்க்கட்சியின் பொது வேட்பாளருக்கு ஆதரவளிப்பதா அல்லது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவரை நிறுத்துவதா என்பது குறித்து இதுவரை தீர்மானிக்கப்படவில்லை.
இது சம்பந்தமாக குறித்த அமைச்சர்கள் குழு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்கள் சிலருடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாக அந்த தகவல்கள் கூறின.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அதிகாரத்தை கைப்பற்றுவதே இந்த அமைச்சர்களின் அடிப்படையான நோக்கம் என்பதுடன் அதற்கு தடையேற்படுத்தும் செயற்பாடுகளுக்கு செல்வதில்லை எனவும் அமைச்சர்கள் முடிவு செய்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக