புதன், 21 ஜனவரி, 2015

கோத்தபாய மீது அமெரிக்காவில் போர்க்குற்றச்சாட்டை சுமத்த முடியும் நியூயோர்க் டைம்ஸ்..!!

போர்க்குற்றச்சாட்டு தொடர்பில் இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய அமரிக்க பிரஜை என்ற அடிப்படையில் அமெரிக்காவில் குற்றச்சாட்டுக்கு உள்ளாகவுள்ளார்.
இத் தகவலை அமெரிக்காவின் சட்ட பேராசிரியர் ராயன் குட்மட்ன் நியூயோர்க் டைம்ஸ் செய்தித்தாளில் இன்று வெளியிட்டுள்ளார்.

அமெரிக்க பிரஜை என்ற அடிப்படையில் 1996ஆம் ஆண்டின் போர்க்குற்ற சட்டத்துக்கு கோத்தபாய ஆளாகிறார். இந்தநிலையில் அமெரிக்க பிரஜை ஒருவர் உலகில் எங்கிருந்தாலும் அமெரிக்க நீதிமன்றத்துக்கு பதில் சொல்லவேண்டியுள்ளவராவார்.

கோத்தபாய  ராஜபக்ச அமெரிக்க பிரஜை என்பதுடன் அவர் லொஸ் ஏஞ்சல்ஸில் வசித்து வந்தார். அத்துடன் லோயாலா சட்டக்கல்லூரியில்
கணணி பிரிவு இயக்குநராக பணியாற்றி வந்தார்.

இந்தநிலையில் போர்க்குற்றச்சாட்டை அமெரிக்காவினால் சுமத்தமுடியும் என்றும் குட்மேன் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஐக்கிய நாடுகளின் விசாரணைகளால் குற்றத்தீர்ப்பாயம் ஒன்றை அமைக்கமுடியாது. அத்துடன் நிதித்தடைகளையும் அந்த சபையால் விதிக்கமுடியாது என்றும் குட்மேன் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக