ஞாயிறு, 1 ஜூன், 2014

தூக்கில் தொங்கிய நிலையில் வயோதிபரின் சடலம் மீட்பு!!


வடமராட்சி கிழக்குப் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் ஒன்று பருத்தித்துறைப் பொலிஸாரால் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை மீட்கப்பட்டுள்ளது. இன்று காலையில் நாகர்கோவில் தெற்குப் பகுதியில் மக்கள் குடியிருக்க அனுமதிக்கப்படாத பிரதேசத்தில் உள்ள சேதமடைந்த வீடு ஒன்றுக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் ஒன்று இருப்பதை அவதானித்த பொதுமக்கள் பருத்தித்துறைப் பொலிஸாருக்கு வழங்கிய
தகவலை அடுத்து அங்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் வெளிச்சவீட்டு வீதியைச் சேர்ந்த தொம்மைப்பிள்ளை (வயது 72) என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் சுமார் ஒரு வாரங்களுக்கு முன்னர் இறந்திருக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சடலம் உடல் கூற்றுப் பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளைப் பருத்தித்துறைப் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக