ஞாயிறு, 1 ஜூன், 2014

3 நாடுகளின் வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தனர்....!!

ரஷ்யா, ஜெர்மனி, அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தை சென்றடைந்தனர்.
உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா வுக்கும் மேற்கத்திய நாடுகள் மற்றும் அமெரிக்காவுக்கும் இடையே பனிப் போர் நிலவி வரும் சூழ்நிலையில் விண்வெளித் துறையில் அந்நாடு களிடையே ஒத்துழைப்பு சிறப்பாக உள்ளதை இந்த நிகழ்வு உறுதிப் படுத்துகிறது.

3 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத் துக்கு வெற்றிகரமாக சென்றடைந்து விட்டனர் என்பதை ரஷ்யாவின் விண்வெளி ஆய்வு மையமான ராஸ்கோஸ்மாஸ் தனது அறிக்கை யில் உறுதிப்படுத்தியுள்ளது.


ரஷ்யாவின் மேக்ஸிம் சுராயெவ், நாசாவின் வைஸ்மேன், ஜெர்மனி யின் அலெக்சாண்டர் கெர்ஸ்ட் ஆகியோர் திட்டமிட்டதற்கு சுமார் 2 மணி நேரம் தாமதமாகவே சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தை சென்றடைந்தனர். எனினும் இதில் பிரச்சினை ஏதும் ஏற்பட வில்லை என்று ராஸ்கோஸ் மாஸ் இணையதளத்தில் தெரி விக்கப்பட்டுள்ளது. இந்த மூவரும் கஜகஸ்தானில் உள்ள மையத்தில் இருந்து சோயூஸ் விண்வெளி ஓடத்தில் புறப்பட்டுச் சென்றனர்.

16 நாடுகள் சர்வதேச விண்வெளி நிலையத்தை அமைத்துள்ளன. இதில் அமெரிக்கா, ரஷ்யா ஆகியவற்றின் பங்களிப்பு பெரும் பான்மையானது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக