கடந்த செவ்வாய்க்கிழமை புதிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் சந்திப்பு நடைபெற்ற சமயம் அந்தச் சந்திப்பில் பங்குபற்றிய யாழ். மாநகர மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா அந்தச் சந்திப்புக்குப் பின்னர் வெளியே வந்து அது குறித்து வெளியிட்ட கருத்து பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருப்பதாக 'த சண்டே
ரைம்ஸ்' வார இதழ் செய்தி வெளியிட்டிருக்கின்றது.
மேற்படி சந்திப்பை அடுத்து, இச்சந்திப்புத் தொடர்பில் இலங்கைத் தரப்பினால் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு இந்தியத் தரப்புக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கின்றது. வழக்கமாக இத்தகைய சந்திப்புக்களின் பின்னரான செய்திக் குறிப்பு இரு தரப்பு இணக்கத்துடனேயே வெளியிடப்படும்.
ஆனால் இம்முறை தன்பாட்டில் இலங்கைத் தரப்பு வெளியிட்ட செய்திக் குறிப்பில், அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தையும், அதற்கு அப்பாலும் சென்று நிறைவேற்றும் தனது உறுதிமொழியை இலங்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என இச்சந்திப்பில் இந்தியப் பிரதமர் குறிப்பிட்டிருந்தமை தவிர்க்கப்பட்டிருந்ததை இந்தியத் தரப்பு விசனத்துடன் கவனத்தில் எடுத்திருந்தது.
இதன் காரணமாகவே இந்த இராஜதந்திரச் சந்திப்புக்களுக்குப் பின்னரான செய்தியாளர் சந்திப்பில் இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளருக்கு மேலதிகமாக இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சுஜாதா சிங் தாமே நேரடியாகப் பங்குபற்றி நிலைமையைத் தெளிவுபடுத்தி விளக்கினார்.
தவிரவும், இன்னொரு உயர் மட்டத் தவறும் இழைக்கப்பட்டது. மேற்படி சந்திப்பில் இலங்கை ஜனாதிபதி தரப்பு அணியுடன் கலந்துகொண்ட யாழ். நகர மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா, சந்திப்பின் பின்னர் 'நியூ டெல்லி டெலிவிஷன்' (என்.டி.ரீ.வி.) இற்கு கருத்து வெளியிடுகையில், பேச்சில் கலந்து கொண்ட இலங்கை ஜனாதிபதி மாகாணங்களுக்கு நிலம் மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதற்கு பேச்சின்போது இணங்கினார் என்று தெரிவித்தார். - அது கூட திக்கித்திணறிய (தட்டுத்தடுமாறிய) ஆங்கிலத்தில் கூறப்பட்டது.
அது இலங்கைத் தரப்புக்கு பெரும் அசெளகரியத்தை ஏற்படுத்துவதாக அமைந்தது. அத்தகைய உறுதிமொழி எதுவும் வழங்கப்படாத நிலையில் அப்படி ராஜபக்ஷ அணியின் பேச்சாளராகச் செயற்பட பற்குணராஜாவை அனுமதித்தவர்கள் யார்? ஒருவரும் அப்படி அனுமதி அளிக்காவிட்டால் இலங்கை ஜனாதிபதியின் அணி சரியாக கருத்துரைக்கப்பட்டு வழிநடத்தப்படவேயில்லை என்பதுதான் அர்த்தம். - இப்படி 'த சண்டே ரைம்ஸின்' அரசியல் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக